முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்யுங்கள் - லாலு பிரசாத் யாதவ்


முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்யுங்கள் - லாலு பிரசாத் யாதவ்
x

முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்யுங்கள் என பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பாட்னா,

இந்தியா அளவில் 11 மாநிலங்களில் கடந்த வாரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக அதன் அலுவகங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 8 மாநிலங்களில் நடந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து. அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் இது குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"பி.எப்.ஐ போல வெறுப்பை பரப்பும் அனைத்து இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும். பி.எப்.ஐயை விட அது மோசமான இயக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "ஆர்.எஸ்.எஸ் இதற்கு முன்னர் இரு முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் தான் முதலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார் என்பதை மறக்காதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story