ஆந்திராவில் லாரி மீது கார் மோதி விபத்து - 9 வயது சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் லாரி மீது கார் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாபட்லா,
ஆந்திராவில் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாபட்லா மாவட்டத்தில் உள்ள மேடராமெட்லா பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னதாக நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் 5 பேரும் சைனாகஞ்சம் மண்டலத்தின் சோபிராலில் உள்ள சிவன் கோவிலில் வழிபாடுக்கு சென்றனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் குண்டூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story