ஜார்கண்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


ஜார்கண்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா என்ற பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா நக்சலைட்டுகள் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன. தகவலின் பேரில் சென்ற போலீசார் நக்சலைட்டுகள் இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதனையடுத்து நக்சலைட்டுகளுக்கும் போலீசாருக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடைப்பெற்றது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து 2 ஏகே47 துப்பாக்கிக்ளும் பணமும் கைப்பற்றப்பட்டன. 5 பேரில் இருவரிடம் தலா ரூ.22 லட்சமும் மற்ற இருவரிடம் தலா ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜார்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story