வெள்ள பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரியுடன் அமித்ஷா பேச்சு
வெள்ள பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார்.
புதுடெல்லி,
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீதிகள், சாலைகளை மழை நீர் ஆக்கிரமித்துள்ளது. தாழ்வான பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேலிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார்.கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வழங்க மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story