கர்நாடகத்தில் ஓட்டல்களில் உணவு விலை உயர்வா?


கர்நாடகத்தில் ஓட்டல்களில் உணவு    விலை உயர்வா?
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் உணவு விலை உயர்வா?

பெங்களூரு: கர்நாடகத்தில் நெய், வெண்ணெய் விலை கடந்த சில மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடக ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலை உயரும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் உணவு பொருட்கள் விலையை தற்போது உயர்த்த போவதில்லை என பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காய்கறிகள் வரத்து குறைவு, நெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ஓட்டல்களில் உணவு பொருட்கள் விலையை உயர்த்த எந்த முடிவும் செய்யவில்லை என கூறியுள்ளனர்.


Next Story