ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடியை செலுத்த நோட்டீசு
வரி ஏய்ப்பு செய்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்துக்கு ரூ.21 ஆயிரம் கோடியை செலுத்த நோட்டீசும் அனுப்பட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து சூதாட்டத்தில் கிடைத்த ரூ.77 ஆயிரம் கோடிக்கு, அரசுக்கு செலுத்த வேண்டிய 28 சதவீத மறைமுக வரியை செலுத்தாமல் இருந்தது. அதாவது வரி ஏய்ப்பு செய்திருந்தது. இந்த வரி ஏய்ப்பு குறித்து ஜி.எஸ்.டி. அமைச்சகத்தின் பொது இயக்குனருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய 28 சதவீத வரியான ரூ.21 ஆயிரம் கோடியை செலுத்த கோரி நோட்டீசு அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story