மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல் வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்-அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல்  வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்-அரசுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கான வார்டு மறுவரையறை பணிகளை 12 வாரங்களில் முடிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மனு

கர்நாடகத்தில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்துகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. அவற்றுக்கு குறித்த காலத்தில் தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே கர்நாடக அரசு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகளை மேற்கொள்ள குழு அமைத்துள்ளது. அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடத்தும் பணிகளை தொடங்க அரசுக்கு உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்த மனு மீது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அலோக் அராதே தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. அந்த தேர்தல் ஆணையம், மாநில அரசின் கர்நாடக கிராம சுவராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு அம்சத்தை நீக்குமாறு கோரியது. அந்த சட்ட அம்சத்தை அனுமதித்தால் மாவட்ட-தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த இன்னும் 1½ ஆண்டுகள் வரை தாமதமாகும் என்று அந்த ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.

12 வாரங்கள்

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறுவது இன்னும் தாமதமானால், அது அரசியல் சாசனத்திற்கு எதிராக அமைந்துவிடும் என்பதால், தங்கள் தரப்பு வாதத்தை ஏற்க வேண்டும் என்று வக்கீல் கோரினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீட்டை இறுதி செய்யும் பணிகளை 12 வாரங்களில் நிறைவு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Next Story