மகசேசே விருது: கேரள முன்னாள் மந்திரி சைலஜா ஏற்க மறுப்பு


மகசேசே விருது: கேரள முன்னாள் மந்திரி சைலஜா ஏற்க மறுப்பு
x

கோப்புப்படம்

மகசேசே விருதை ஏற்க கேரள முன்னாள் மந்திரி சைலஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

மறைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக பொதுசேவை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என பல துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்வோருக்கு மகசேசே விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்ற சிறப்புக்குரியது.

இந்த விருது, கேரள முன்னாள் சுகாதார மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான கே.கே.சைலஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை அவர் ஏற்க மறுத்து விட்டார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் நேற்று பேசுகையில், "தனிப்பட்ட திறனுக்காக இதை நான் பெற விரும்பவில்லை. நான் செய்த சேவையெல்லாம் கூட்டு முயற்சி. அதைத் தனிப்பட்ட முறையில் நான் பெறுவது சரியாக இருக்காது" என தெரிவித்தார்.

ஆனால், பிலிப்பைன்ஸ் நாட்டில் கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியவர் ரமோன் மகசேசே என்பதால், அவரது பெயரால் வழங்கப்படுகிற விருது என்பதாலும்தான் சைலஜா நிராகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார்.


Next Story