முன்னாள் போலீஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் பா.ஜனதாவில் சேர்ந்தார்


முன்னாள் போலீஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் பா.ஜனதாவில் சேர்ந்தார்
x

முன்னாள் போலீஸ் அதிகாரி பாஸ்கர் ராவ் பா.ஜனதாவில் சேர்ந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் பாஸ்கர் ராவ். அவர் விருப்ப ஓய்வு பெற்று கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். இந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகி அவர் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். அதன் பிறகு நளின்குமார் கட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், 'பாஸ்கர் ராவ் பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்தபோது, நேர்மையான அதிகாரியாக பணியாற்றினார். ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர் தற்போது பா.ஜனதாவுக்கு வந்துள்ளார். அவரை நான் வரவேற்கிறேன். அவர் பா.ஜனதாவை பலப்படுத்த தீவிரமாக பணியாற்றுவார்' என்றார்.

அதைத்தொடர்ந்து பாஸ்கர் ராவ் கூறுகையில், 'சமாதனத்தை பின்பற்றும், தேசியத்தை முன்னிறுத்தும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் பணியாற்றி இருக்கிறேன். நான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் அந்த கட்சி கர்நாடகத்தில் வளர்வது போல் தெரியவில்லை. கட்சியை பலப்படுத்த நான் பாடுபடுவேன். அகண்ட இந்தியாவை கட்டிக்காக்கும் பலம் பா.ஜனதாவுக்கு மட்டுமே உள்ளது' என்றார்.

இந்த விழாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story