முன்னாள் மத்திய சட்டத்துறை மந்திரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
முன்னாள் மத்திய சட்டத்துறை மந்திரி சாந்தி பூஷன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் ஆட்சி காலத்தில் 1977 முதல் 1979 வரை மத்திய சட்டத்துறை மந்திரி இருந்தவர் சாந்தி பூஷன்.
மூத்த வழக்கறிஞராகவும் சட்டத்துறை மந்திரியாகவும் இருந்து வந்தார்.
ரபேல் போர்விமான விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல மனுவில் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட புகழ்பெற்ற வழக்கில் சாந்தி பூஷன் ஆஜரானார். அந்த வழக்கில் இந்திரா காந்தியின் வெற்றி ரத்து செய்யப்பட்டது.
இதுநிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் நேற்று தனது 97 வது வயதில் காலமானார்.
அவருடைய மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "சட்டத்துறை மந்திரியாக அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் தாழ்த்தப்பட்டோர்களுக்காக பேசுவதில் உள்ள ஆர்வத்திற்காகவும் ஸ்ரீ சாந்தி பூஷன் ஜி நினைவு கூறப்படுகிறார். அவரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.