மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை, பணம் நூதன மோசடி
சிக்பள்ளாபுராவில் பரிகார பூஜை செய்வதாக கூறி மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் நகை, பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:
சிக்பள்ளாப்பூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் கங்காதரய்யா. இவரது மனைவி பசவராஜம்மா(வயது 75). கணவனை இழந்த இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை அமைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு வந்த ஒரு மர்ம நபர், கடையில் வியாபாரம் நன்றாக இருக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அதற்கு ஒப்புக்கொண்ட பசவராஜம்மாவை நூதன முறையில் ஏமாற்றி அந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பசவராஜம்மா இதுபற்றி சிக்பள்ளாப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story