கவரிங் நகைகளை கொடுத்து வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி
தாவணகெரேயில் கவரிங் நகைகளை கொடுத்து வியாபாரியிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு:-
தாவணகெரே மாவட்டம் செல்லகெரே தாலுகா கல்லஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகர். வியாபாரி. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ் (வயது 30) என்பவர், தான் புதிய வீடு கட்டுமான வேலை செய்யும் இடத்தில் குழி தோண்டும்போது தங்க நகை கிடைத்ததாகவும், அதனை குறைந்த விலைக்கு தருகிறேன் என்றும் கூறி உள்ளார். இதனை நம்பிய பிரபாகர், கணேசிடம் ரூ.8 லட்சம் கொடுத்து அந்த நகைகளை வாங்கினார். அந்த நகைகளை வாங்கிய பிறகு தான், அது தங்க நகைகள் இல்லை கவரிங் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர், கணேசிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது கணேஷ் பணத்தை கொடுக்க மறுத்ததுடன், அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, கவரிங் நகைகளை கொடுத்து தன்னிடம் ரூ,.8 லட்சத்தை கணேஷ் மோசடி செய்துவிட்டதாக பிரபாகர், செல்லகெரே போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். ேமலும் அவரிடம் இருந்து ரூ.8 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.