லோக் அயுக்தாவுக்கு முழு அதிகாரம்-அரசுக்கு முன்னாள் நீதிபதி வலியுறுத்தல்
லோக் அயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே நேற்று முன்தினம் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மைசூரு:
ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து லோக் அயுக்தாவை கொண்டு வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால் லோக் அயுக்தாவுக்கு அரசு முழு அதிகாரத்தை அளிக்க வேண்டும். லோக் அயுக்தாவுக்கு தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஊழல், முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சக்தி லோக் அயுக்தாவுக்கு உள்ளது. இதனை அரசியலுக்காக பயன்படுத்தாமல், நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். நேர்மையாக ஊழல் செய்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். லோக் அயுக்தாவுக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story