சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு: சோனியா காந்தி, ராகுல் பங்கேற்கவில்லை


சத்தீஷ்கரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு: சோனியா காந்தி, ராகுல் பங்கேற்கவில்லை
x

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

ராய்பூர்,

சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-ஆவது மாநாடு இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்கான தெளிவான வியூகம் வகுப்பதற்காக இந்தக் கூட்டம் கூடியுள்ளது. காரிய கமிட்டியின் முதல் நாளான இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் வழிகாட்டுதல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் கட்சியில் உயா்பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா இல்லையா என முடிவு எடுக்கபட உள்ளது. காரியக் கமிட்டிக்கு தோ்தல் மூலமே தோ்வு செய்யப்பட வேண்டும் என்று இளைஞா்களும், நியமனம் மூலமே நடைபெற வேண்டும் என்று மூத்த தலைவா்களும் வலியுறுத்தி வருவதால் காந்தி குடும்பத்தினரின் தலையீடு வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் இருக்கக் கூடாது என்பதற்காக காந்தி குடும்பத்தினர் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. வழிகாட்டுதல் கூட்டம் முடிந்த பிறகு சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதாக தெரிகிறது.


Next Story