சென்னை நோக்கி வந்த ரெயிலில் கொள்ளை கும்பல் கைவரிசை


சென்னை நோக்கி வந்த  ரெயிலில் கொள்ளை கும்பல் கைவரிசை
x

சென்னை நோக்கி வந்த ரெயிலில் கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் சென்னை நோக்கி வந்த 2 ரெயில்களில் பயணிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த பயணிகளிடம் 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது.

சிங்கராயா கொண்டா மற்றும் கவாலீடையே சென்று கொண்டிருந்தபோது விரைவு ரெயிலில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத் - சென்னை சார்மினார் ரெயிலில் எஸ்.1, எஸ்.2 பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


Next Story