'ஜிபி வாட்ஸ்-அப்'இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக தகவல்


ஜிபி வாட்ஸ்-அப்இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக தகவல்
x

கூடுதல் அம்சங்கள் உள்ள ஜிபி வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் போன்றே தோற்ற அமைப்புடனும் கூடுதல் அம்சங்களுடனும் ஜிபி வாட்ஸ்ஆப் என்ற செயலியும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுக்க அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் போன்று பிளே ஸ்டோரிலுள்ள ஜிபி வாட்ஸ்ஆப் இந்திய பயனர்களின் தரவுகளைத் திருடும் அபாயம் உள்ளதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டேம்பரிங் செய்யவும் ஜிபி வாட்ஸ்ஆப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்தியர்களின் சாட்களை (Chats) ஜிபி வாட்ஸ்ஆப் திருடுவதாக இஎஸ்இடி ஆண்டி வைரஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் அங்கீகரிக்கப்படாத குளோனிங் செயலிகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் தடை செய்து வருகிறது. அத்தகைய செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு வருகின்றன. அது தொடர்ந்தால் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.


Next Story