ஜி.டி.தேவேகவுடாவின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும்- முன்னாள் பிரதமர் தேவேகவுடா உத்தரவு


ஜி.டி.தேவேகவுடாவின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும்-  முன்னாள் பிரதமர் தேவேகவுடா உத்தரவு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஜி.டி.தேவேகவுடாவின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு: மைசூரு மாவட்ட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஜி.டி.தேவேகவுடாவின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா உத்தரவிட்டுள்ளார்.

சாமி தரிசனம்

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா நேற்று காலையில் மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டார். அப்போது அவருடன் முன்னாள் மந்திரியும், ஜனதா தளம்(எஸ்) கட்சி மூத்த தலைவருமான ஜி.டி.தேவேகவுடாவும் வந்தார். பூஜைகள் முடிந்து கோவிலுக்கு வெளியே வந்த பின்பு தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.டி.தேவேகவுடா குறித்து யாராவது பேசினால் சகித்துக் கொள்ள மாட்டேன். அவரைப்பற்றி கீழ்த்தரமாக பேசுபவர்கள் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம். கட்சியின் மைசூரு மாவட்ட பொறுப்பை ஜி.டி.தேவேகவுடாவிடம் ஒப்படைத்துள்ளேன்.

கட்டுப்பட வேண்டும்

இனி மைசூரு மாவட்டத்தில் நடக்கும் கட்சியின் அனைத்து நிகழ்வுகளையும், கட்சி பணிகளையும் ஜி.டி.தேவேகவுடா தலைமை ஏற்று நடத்துவார். ஜி.டி.தேவேகவுடா எடுக்கும் முடிவே இறுதியானது. அவரது முடிவுக்கும் கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும். அவரைப்பற்றி யாரும் ஆதாரமற்ற குற்றங்களை கட்சியினர் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்போதுள்ள சூழ்நிலையில் கட்சியை பலப்படுத்தி தேர்தலை எதிர்கொண்டு ஆட்சிக்கு வர முயற்சிப்பதுதான் கட்சியினரின் முதற்கட்ட பணியாகும். மைசூரு மாவட்ட கட்சியினர் ஜி.டி.தேவேகவுடாவின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story