சிவமொக்காவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கீதா சிவராஜ்குமார் போட்டி?


சிவமொக்காவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கீதா சிவராஜ்குமார் போட்டி?
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில கீதா சிவராஜ்குமார் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரியாக உள்ளார். இவருக்கு ஆதரவாக இவரது சகோதரியும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியுமான கீதா சிவராஜ்குமார் மற்றும் சிவராஜ்குமாரும் தேர்தல் பிரசாரம் செய்தனர். மேலும் சித்தராமையாவுக்கும் ஆதரவாகவும் அவர்கள் பிரசாரம் செய்தனர். இதையடுத்து சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார் ஆகியோர் முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசினர். இந்தநிலையில் நேற்று பெங்களூருவில் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சி மாநில தலைவருமான டி.கே.சிவகுமாரை நடிகர் சிவராஜ்குமார், கீதா சிவராஜ்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் மந்திரி மதுபங்காரப்பா உடன் இருந்தார். இந்த சந்திப்புக்கு பிறகு கீதா சிவராஜ்குமாரிடம், சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிட எந்த முடிவும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி, எனது கணவர், எனது சகோதரர் என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன். முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். இதில் எந்த அரசியல் பற்றியும் பேசவில்லை என்றார்.


Next Story