ராணுவத்தில் ஜெனரல் திம்மையாவின் பங்களிப்பு ஈடு இணையற்றது; ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் புகழாரம்


ராணுவத்தில் ஜெனரல் திம்மையாவின் பங்களிப்பு ஈடு இணையற்றது; ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் புகழாரம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:30 AM IST (Updated: 30 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் ஜெனரல் திம்மையாவின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் புகழ்ந்து பேசினார்.

குடகு;

நினைவு பவன்

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ளது ஜெனரல் திம்மையா நினைவு பவன். இந்த நினைவு பவனுக்கு இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தனது குடும்பத்தினருடன் வந்தார். அங்கு ராணுவ வீரர்கள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்த அவர் ஜெனரல் திம்மையாவின் குழந்தை பருவம் மற்றும் ராணுவத்தில் பணியாற்றியபோது எடுத்த புகைப்படம், சிற்பங்கள் மற்றும் வீடியோக்களை பார்வையிட்டார்.

இதையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

ராணுவத்தில் ஜெனரல் திம்மையாவின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது பெயரை நிலைநாட்டும் வகையில் குழந்தை பருவம் முதல் ராணுவத்தில் பணியாற்றியது வரையிலான புகைப்படங்கள் உள்ளது. ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது.

பெருமையாக நினைக்கிறேன்

இதேபோல இந்த மண்டபத்தில் ராணுவ வீரர் வீரசேனானியின் வாழ்க்கை வரலாற்று சிற்பங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை வரும்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக அமையும்.

இந்த புகைப்படங்களை போன்று இங்கு இருக்கும் நினைவு தூண்கள் மற்றும் அடையாள சின்னங்கள் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும். இந்த தருணத்தில் அவர்களின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதை பெருமையாக நினைக்கிறேன்.


Next Story