கன்டெய்னர் வேனில் கடத்தி வந்த ரூ.6½ கோடி தங்கம், வெள்ளி சிக்கின


கன்டெய்னர் வேனில் கடத்தி வந்த ரூ.6½ கோடி தங்கம், வெள்ளி சிக்கின
x

தரிகெரே அருகே கன்டெய்னர் வேனில் கடத்தி வந்த வந்த ரூ.6½ கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி சிக்கின. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:-

கன்டெய்னர் வேன்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சேர்ந்து சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுபோல் சிவமொக்கா, சிக்கமகளூரு, பெங்களூரு மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி அருகில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த சிறிய கன்டெய்னர் வேன் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் கன்டெய்னர் வேனை நிறுத்தும்படி கைஅசைத்தனர்.

இதை பார்த்த டிரைவர், சிறிது தூரத்திலேேய கன்டெய்னர் வேனை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசாரும், அதிகாரிகளும், கன்டெய்னர் வேனில் சோதனையிட்டனர். இதில் தங்க நகைகளும், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்கள் குவியல், குவியல்களாக இருந்தன.

ரூ.6½ கோடி தங்கம்- வெள்ளி

மொத்தம் 17 கிலோ 40 கிராம் எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 44 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக

தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

சிவமொக்காவில் ரூ.1.30 கோடி ரொக்கம் அதுபோல் சிவமொக்கா டவுன் துங்கா நகரில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.30 கோடி ரொக்கமும், பெங்களூரு லால்பாக் பூங்கா தெற்கு கேட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் ரூ.30 லட்சம் ரொக்கம் இருந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story