குண்டுவெடிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை


குண்டுவெடிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குண்டுவெடிப்பு சம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மந்திரி சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

மங்களூரு:-


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் நடந்த ஆட்டோ வெடிகுண்டு விபத்து நடந்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் பூஜாரி, அதில் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில், வெடிகுண்டு சம்பவம் பயங்கரவாத செயல் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வெடி குண்டு விபத்து நடந்த இடத்திற்கு சென்று தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி சுனில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், போலீஸ் அதிகாரிகள் விவரங்களை கேட்டறிந்தார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு சம்பவத்தின் பின்னனியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். பி.எப்.ஐ. தடைக்கு பிறகு இதுபோன்ற வெடிகுண்டு விபத்து சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனாலும் அதனை முறியடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை ஒட்டுமொத்த சமுதாயமும் நின்று எதிர்கொள்ள வேண்டும்.

அரசு இழப்பீடு

பயங்கரவாதிகளின் வெடிகுண்டை வெடிக்க வைக்க கத்ரி கோவில்,பொது இடங்களை இலக்காக வைத்து இருந்துள்ளனர்.ஆனால் அவர்களது திட்டம் தோல்வியடைந்தது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதனால் நாட்டின் எந்தப் பகுதியிலும் இதுபோன்ற சூழல் உருவாகக் கூடாது. இச்சம்பவத்தை அனைவரும் கண்டித்து கவனமாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவரின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story