அரசின் திட்டங்கள் மக்களின் இல்லம் தேடி சென்றடைகிறது
அரசின் திட்டங்கள் மக்களின் இல்லம் தேடி சென்றடைகிறது என்று அன்னதாணி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஹலகூர்:
மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே பேடரஹள்ளி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டரின் கிராம தங்கல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை அன்னதாணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:- மண்டியா மாவட்டத்தில் மழையால் ஏரிகள் நிரம்பி வழிகிறது. விவசாய நிலத்திற்கு நீர் புகுந்ததில் ஏராளமான விளை நிலங்கள் நாசமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தாங்கள் வசித்து வரும் இடங்களில் மேற்கொள்ளவேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தாசில்தாரிடம் மனு அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஏற்கனவே அரசின் திட்டம் இல்லத்தை தேடி சென்று வருகிறது. அதேபோல் கிராம தங்கல் நிகழ்ச்சி மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story