சிறப்பு கூட்டத் தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு


சிறப்பு கூட்டத் தொடர்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
x

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு முன்பாக வரும் 17-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டம் வரும் 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்திற்கான அழைப்பிதழ் அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்.18-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சிறப்பு கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story