அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
குடகு:-
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மனோகர் நாயக். இவர் குடகு மாவட்ட தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறினர். இதையடுத்து அவர்களது பெற்றோர் மடிகேரி மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய மடிகேரி மகளிர் போலீசார் மனோகர் நாயக் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிள் மனோகர் நாயக்கை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.