ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் சொந்த ஊரில் களைகட்டும் கொண்டாட்டம்! லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்!!


ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் சொந்த ஊரில் களைகட்டும் கொண்டாட்டம்! லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரம்!!
x

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை பெறுவார்.

புவனேஷ்வர்,

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவே அடுத்த ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் வெற்றி பெற்றால் நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி என்ற சிறப்பை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் இன்று வெளியானதும் பா.ஜனதா - தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவின் வெற்றியை அவரது சொந்த ஊரில் பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

தேர்தல் முடிவுகள் வெளியானதும், அவரது சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ரங்பூரில் விநியோகிக்க 50,000 லட்டுக்கள் தயாராகி வருகிறது. இதற்கான லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

முர்முவின் சொந்த ஊருக்கு அதை சுற்றியுள்ள கிராமத்தினரும் வந்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் இணைந்து முர்முவின் வெற்றியை மாபெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாட உள்ளனர். இதில், ஒடிசா பழங்குடிகளின் பாரம்பரிய நடனமும் இடம்பெற உள்ளது. இதற்காக பல கலைஞர்களும் ராய்ரங்பூர் வந்து சேர்ந்துள்ளனர்.

ராய்ரங்பூரின் பாஜக பிரிவினரும் தனியாக வெற்றி கொண்டாட்டம் நடத்த உள்ளனர். பாஜக தரப்பில் ஊர்வலம் நடத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க 20,000 லட்டுக்களை தயார் செய்துள்ளனர். திரவுபதியின் வெற்றி பெற்ற பின் அவரை வாழ்த்திட ஒடிசா முழுவதிலும் நூற்றுக்கணக்கான பெரும் பதாகைகளும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

முர்முவின் வெற்றியை டெல்லியிலும் பாஜக உற்சாகமாகக் கொண்டாடத் தயாராகி வருறது. அங்குள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அதன் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.பாஜக அலுவலகம் அமைந்துள்ள பந்த் மார்க்கின் சாலைகளிலும் கட்சித் தலைவர்கள் அணிவகுத்துச் சென்று வெற்றியை கொண்டாத் திட்டமிட்டுள்ளனர்.


Next Story