திருமண வரவேற்பை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய மாப்பிள்ளை - குண்டு பாய்ந்து நண்பன் உயிரிழப்பு - வீடியோ


திருமண வரவேற்பை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய மாப்பிள்ளை - குண்டு பாய்ந்து நண்பன் உயிரிழப்பு - வீடியோ
x

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாப்பிள்ளை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், முதலில் துப்பாக்கி வேலைசெய்யவில்லை.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பிரம்மநகர் பகுதியில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மனீஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால், மனீஷ் வைத்திருந்த கைத்துப்பாக்கி முதலில் வேலை செய்யவில்லை. இதனால், துப்பாக்கி ஏன் சுடவில்லை? என மனீஷ் ஆராய்ந்தார்.

அப்போது, திடீரென மனீஷ் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்தது. அது, திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த மனீஷின் நண்பரான பாபு லால் மீது துப்பாக்கி குண்டு பாந்தது. இதில், பாபு லால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

மனீஷின் நண்பரான பாபு லால் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனீஷ் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பாபு லாலுடையதாகும்.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பாபு லாலை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பாபு லாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடா்பாக மாப்பிள்ளை குடும்பத்தினா் மீது போலீசாா் வழக்கு பதிவு செய்து உள்ளனா். துப்பாக்கியால் சுட்ட மாப்பிளையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகளின்போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பழக்க வழக்கம் சில பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story