ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., அவரது மகன் போட்டி:


ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., அவரது மகன் போட்டி:
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரு:

மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜி.டி.தேவேகவுடா. இவர், அக்கட்சி மீது அதிருப்தியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா, மகன் குமாரசாமியுடன் நேரில் சென்று பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அப்போது அவர், ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ.விடம் கட்சியை விட்டு விலக வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் மைசூரு மாவட்ட கட்சி பொறுப்பையும் ஜி.டி.தேவேகவுடாவுக்கு வழங்கியதாக தகவல் வெளியானது.

இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் மீண்டும் ஜி.டி.ேதவேகவுடா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி உன்சூர் தொகுதியில் போட்டியிட அவரது மகன் ஹரிஷ் கவுடாவுக்கு டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இதனால் அந்த 2 தொகுதிகளில் டிக்கெட்டுக்கு ஆசைப்பட்டு காத்திருந்த கட்சியை சேர்ந்த சோமசேகர், பீரிஉண்டி பசவண்ணா, சித்தே மரிசுவாமி உள்ளிட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதன்காரணமாக அவர்கள், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை சந்திக்க தயாராக உள்ளதாக தகவலும் வெளியாகியுள்ளது.


Next Story