"2 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர்" முதல் மனைவிக்கு 3 நாட்கள் 2-வது மனைவிக்கு 3 நாட்கள்
குருகிராம் திரும்பியதும் என்ஜினியருக்கு அலுவலகத்தில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
குவாலியர்
மத்திய பிரதேசம் குவாலியரைச் சேர்ந்தவர் சீமா. அரியானா மாநிலம் குருகிராமில் பணிபுரியும் என்ஜினியர் ஒருவரை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடி இரண்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.அப்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் சீமாவை அவரது கணவர் குவாலியருக்கு அழைத்து வந்து விட்டார்.
தனது மனைவியையும் குழந்தையையும் குவாலியருக்கு அழைத்து வந்த பிறகு. ஊரடங்கு முடிந்த பின் மனைவியையும் குழந்தையையும் விட்டு விட்டு என்ஜினியர் மீண்டும் வேலைக்காக குருகிராம் திரும்பினார்.
குருகிராம் திரும்பியதும் என்ஜினியருக்கு அலுவலகத்தில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அறிந்த சீமா, கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். விவாகரத்தின் ஒரு பகுதியாக ஆலோசனை அமர்வுகளின் போது அவர்கள் மீண்டும் இணைந்தனர்.
சீமா தன் கணவனை மன்னித்து கணவனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தார் இதன் அடிப்படையில் குருகிராமில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை எடுத்த என்ஜினிய தனது இரு மனைவிகளுடன் வாரத்தில் தலா மூன்று நாட்களைக் கழிக்கவேண்டும் என மனைவிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.