ஞானவாபி மசூதி வளாகத்திலுள்ள கோயிலை சேதப்படுத்தியதாக மனு தாக்கல்; அடுத்த வாரம் விசாரணை


ஞானவாபி மசூதி வளாகத்திலுள்ள கோயிலை சேதப்படுத்தியதாக மனு தாக்கல்; அடுத்த வாரம் விசாரணை
x

மசூதி கமிட்டி, ஞானவாபி வளாகத்தில் உள்ள விஷேஷ்வர் கோயிலின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

வாரணாசி,

ஞானவாபி மசூதி விவகாரம் மீதான வழக்கு விசாரணை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விஸ்வ வைதிக் சனாதன சங்கத்தின் (விவிஎஸ்எஸ்) தலைவர் ஜிதேந்திர சிங் விசென் நேற்று வாரணாசி மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில் வழிபாட்டு தல சட்டத்தின் கீழ், அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் (ஏஐஎம்) கமிட்டி மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூதி கமிட்டி, ஞானவாபி வளாகத்தில் உள்ள விஷேஷ்வர் கோயிலின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்த முயற்சித்ததாக அதில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு, ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. இது தவிர, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஞானவாபி வளாகத்தில் நுழைவதை தடை செய்யக் கோரி வி.வி.எஸ்.எஸ் தலைவர் மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

ஞானவாபி மசூதி விவகாரம் சற்று தணிந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மூலம் மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.


Next Story