இளைஞர்களை கவரும் வகையில் கைத்தறி தொழில் பல்வகைப்படுத்த வேண்டும் - நிர்மலா சீதாராமன்


இளைஞர்களை கவரும் வகையில் கைத்தறி தொழில் பல்வகைப்படுத்த வேண்டும் - நிர்மலா சீதாராமன்
x

கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கும் வகையில் அதன் தயாரிப்புகளை பல்வகைப்படுத்த வேண்டும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளவில் உள்ள பாலராமபுரம் கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனத்தின் பொது வசதி பயிற்சி மையத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "கைத்தறி தொழிலில் லாபத்தை அதிகரிக்கவும், கைத்தறி பொருட்களை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் தயாரிப்புகளை பல வகைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு நெசவாளரும் நிறுவனத்தின் லாபத்தில் பயனடைய வேண்டும்.

நெசவாளர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய இ-மார்கெட்டிங் மற்றும் அரசின் இணையதள பக்கத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக நபார்டு ஆதரவு அளிக்கும். மத்திய அரசு பாலராமபுரம் மேம்பாட்டிற்கு மாநிலத்தின் எந்த திட்டத்தையும் பரிசீலிக்க தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மந்திய மந்திரி வி.முரளீதரன், தொழில்துறையில் சரியான நேரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.


Next Story