சிறைச்சாலையில் தூக்கிட்டு கைதி தற்கொலை
தார்வாரில் சிறைச்சாலையில் தூக்கிட்டு கைதி தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி;
தார்வார் தாலுகா நரேந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 35). இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் சவிதா என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தார்வார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சிறையில் இருந்த ஆனந்த், நேற்றுமுன்தினம் இரவு சிறை கழிவறைக்கு போர்வையுடன் சென்றுள்ளார். பின்னர் கழிவறையில் போர்வையால் தூக்குப்போட்டு ஆனந்த் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சத்தம் கேட்டு வந்த சிறை வார்டன்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஆனந்த் உயிரிழந்தார்.
Next Story