பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதன்படி மாநில அரசு 8 வாரங்களில் வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இட ஒதுக்கீட்டு விஷயங்களை முடிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சி தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை மாதம் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் அன்றைய தினம் அந்த வழக்கு விசாரணைக்கு வரவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மாநில அரசு வார்டு மறுவரையறை பணிகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது. அதே நேரத்தில் இட ஒதுக்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யாததால் மாநகராட்சி தேர்தலை நடத்த மேலும் காலஅவகாசம் வழங்குமாறு மாநில அரசு கேட்க திட்டமிட்டுள்ளது. இந்த கருத்தை நீதிபதிகள் ஏற்று கொள்வார்களா? என்று தெரியவில்லை.