ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து


ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து
x
தினத்தந்தி 24 Oct 2022 4:30 AM IST (Updated: 24 Oct 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

நம் உள்ளும், புறமும் உள்ள அறியாமை இருளை அகற்றும் ஞானத்தை தீபாவளி ஒளி குறிக்கிறது.

புதுடெல்லி,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி, ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. தீபாவளி நாளில், மக்கள் தங்கள் ீவீடுகளில் லட்சுமியை வழிபட்டு, ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும், வளமைக்கும் வேண்டிக் கொள்வார்கள். பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான தருணம்தான் தீபாவளி பண்டிகை. நம் உள்ளும், புறமும் உள்ள அறியாமை இருளை அகற்றும் ஞானத்தை தீபாவளி ஒளி குறிக்கிறது.

இந்த மங்களகரமான நாளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விளக்கு போல், நமது வாழ்க்கையில் ஒளியும், ஆற்றலும் பரவட்டும். நலிந்தோருக்கு உதவும் உணர்வு, மக்களின் மனதில் ஆழ்ந்து வளரட்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story