கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி - அரவிந்த் கெஜ்ரிவால்


கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி - அரவிந்த் கெஜ்ரிவால்
x

தமிழகத்திற்க்கு வர அழைப்பு விடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி மூன்று புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. அதன்படி 15 மாதிரி பள்ளிகள், 26 சீர்மிகு பள்ளிகள், கல்லூரி மாணவியருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்ள உள்ளார். இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தமிழகத்திற்க்கு வர அழைப்பு விடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி புரட்சி பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.


Next Story