ஹரிபிரசாத்தின் கருத்துக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவிற்கும் சம்பந்தம் இல்லை- மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு


ஹரிபிரசாத்தின் கருத்துக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவிற்கும் சம்பந்தம் இல்லை- மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேச்சு
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஹரிபிரசாத்தின் கருத்துக்கும் முதல்-மந்திரி சித்தராமையாவிற்கும் சம்பந்தம் இல்லை என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. காபி தோட்டங்களில் மழையால் செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்ட பொறுப்பு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், சிக்கமகளூருவில் முகாமிட்டு, மழை பாதித்த இடங்களை ஆய்வு ெசய்து வருகிறார். நேற்று என்.ஆர்.புரா தாலுகா சார்கோடு கிராமத்தில் மழையால் கால்நடைகளை இழந்த, உமேஷ் என்பவரை சந்தித்து மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உதவி தொகை வழங்கினார்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த கே.ஜே.ஜார்ஜ் கூறியதாவது:-

காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிபிரசாத் ஒரு பொறுப்பான மனிதர். காங்கிரஸ் கட்சிக்காக நெடுநாட்களாக உழைத்து வருகிறார். முதல்-மந்திரி சித்தராமையா குறித்து ஹரிபிரசாத் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் முதல்-மந்திரி சித்தராமையா குறித்து பேசவில்லை. பல மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பல அரசியல் தலைவர்கள் அவரால் முதல்-மந்திரி பதவியில் உள்ளனர். இதனால் இந்த கருத்து, வெளிமாநிலத்தை சேர்ந்த முதல்-மந்திரிகளை பற்றி பேசியதாக இருக்கவேண்டும். கர்நாடக முதல்-மந்திரியை பற்றி அவர் பேசியிருக்கமாட்டார். இதை வைத்து சிலர் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல்கள் இருப்பதாக கருத்து கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் கருத்துவேறு

பாடுகள் இல்லை.அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story