அரியானாவில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் மீது வழக்குப்பதிவு

குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தனது சகோதரனுக்கு உணவு கொடுத்துவிட்டு பள்ளியில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, 3 நபர்கள் அந்த சிறுமியை கடத்தி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியை கடுமையாக தாக்கிவிட்டு, குப்பை தொட்டிக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய்க்கு தகவல் கிடைத்த நிலையில், அவர் சம்பவ இடத்திற்குச் சென்று தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அன்குஷ், தேவ் உள்பட 3 நபர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.