மடிக்கணினியை லஞ்சமாக வாங்கிய தீயணைப்பு அதிகாரி உள்பட 2 பேர் கைது


மடிக்கணினியை லஞ்சமாக வாங்கிய தீயணைப்பு அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மடிக்கணினியை லஞ்சமாக வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரி உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

சிக்கமகளூரு-

பள்ளிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மடிக்கணினியை லஞ்சமாக வாங்கிய தீயணைப்பு துறை அதிகாரி உள்பட 2 பேரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

தடையில்லா சான்றிதழ்

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் பள்ளியின் பாதுகாப்பு குறித்து பெற்ற தடையில்லா சான்றிதழ் காலாவதி ஆகிவிட்டது. இதனால் அதனை புதுப்பிக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் ரகுநாத் ஹரிஹரா தீயணைப்பு படை அலுவலகத்தில் தலைமை அதிகாரி பசவபிரபு சர்மாவிடம் மனு கொடுத்திருந்தார்.

அவர் பள்ளியின் தடையில்லா சான்றிதழை புதுப்பிக்க விலை உயர்ந்த மடிக்கணினியை கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவிக்காத அவர், இதுகுறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் ரகுநாத்திடம் சில அறிவுரைகளை வழங்கி ரூ.38 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை வாங்கி கொடுத்தார். பின்னர் லேப்டாப்பை வாங்கி கொண்டு ஹரிஹரா தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அங்கு அதிகாரி பசவபிரபுவிடம் கொடுக்க சென்றார்.

2 பேர் கைது

அப்போது லேப்டாப்பை தீயணைப்பு ஊழியர் ராஜேஷ் என்பவரிடம் கொடுக்கும் படி பசவபிரபு ரகுநாத்திடம் கூறினார். இதையடுத்து அவர் ராஜேசிடம் லேப்டாப்பை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் ராஜேஷ் மற்றும் அதிகாரி பசவபிரபு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மடிக்கணினியை லோக் அயுக்தா போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேர் மீது லோக் அயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story