பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து ஒப்பந்த ஊழியர் கைது


பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  கிராம பஞ்சாயத்து ஒப்பந்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 5 Jun 2023 12:15 AM IST (Updated: 5 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து ஒப்பந்த ஊழியரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூருவில் பட்டா வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து ஒப்பந்த ஊழியரை லோக் அயுக்தா போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 ஆயிரம் லஞ்சம்

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கெரேசந்தே கிராமத்தை சேர்ந்தவர் பாப்பாநாயக். இவரது மகன் மூர்த்தி நாயக், விவசாயி. இவரது கிராமத்தில் தந்தைக்கு சொந்தமான சொத்து உள்ளது. இந்த சொத்திற்கான பட்டா தந்தை பாப்பாநாயக்கின் பெயரில் இருந்தது. அந்த பட்டாவை தனது பெயருக்கு மாற்ற முயற்சித்தார். இதற்காக கெரேசந்தே கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தார்.

அங்கிருந்து ஊழியர்கள் பட்டா மாற்றம் செய்து, மூர்த்தி நாயக்கிடம் வாங்கி செல்லும்படி கூறினர். இதையடுத்து மூர்த்தி நாயக் பட்டாவை வாங்க சென்றார். அப்போது கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பணியாற்றும் கம்ப்யூட்டர் ஊழியர் ரோஹித் என்பவர் பட்டா வழங்கவேண்டும் என்றால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி கூறினார்.

பஞ்சாயத்து ஊழியர் கைது

இதை ஏற்று கொள்ள மறுத்த மூர்த்திநாயக், இது குறித்து லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்ற லோக் அயுக்தா போலீசார் மூர்த்தி நாயக்கிற்கு ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனுப்பினார். அந்த ரூபாய் நோட்டுகளை மூர்த்தி நாயக், ரோஹித்திடம் வழங்கினார்.

அதை ரோஹித் கையில் வாங்கியபோது மறைந்திருந்த லோக் அயுக்தா போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த லோக் அயுக்தா போலீசார் ரோஹித் மீது வழக்கு பதிவு செய்தனர்.


Next Story