மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : நாளை மத்திய அரசு ஆலோசனை
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா குறித்து நாளை மத்திய அரசு ஆலோசனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தநிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story