பெங்களூருவில் பலத்த மழைக்கு ரூ.15 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரம் மூழ்கியது
பெங்களூருவில் பலத்த மழைக்கு ரூ.15 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரம் மூழ்கியது
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நகரில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் சில்க் போர்டு ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்திற்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக அங்கிருந்த ஏ.டி.எம் எந்திரமும் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் முட்டு அளவுக்கும் மேல் தண்ணீர் ஏ.டி.எம். மையத்திற்குள் தேங்கி நின்றது. இதுபற்றி அறிந்ததும் வங்கி அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஏ.டி.எம் எந்திரத்தில் ரூ.15 லட்சம் பணம் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. தண்ணீரில் எந்திரம் மூழ்கியதால் பணமும் தண்ணீரில் நனைந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி அறிந்ததும் வங்கி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.