சட்டவிரோத மத வழிபாட்டு தலங்கள், கூடங்கள் அனைத்தையும் மூடுங்கள் - அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


சட்டவிரோத மத வழிபாட்டு தலங்கள், கூடங்கள் அனைத்தையும் மூடுங்கள் - அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் மூடுமாறு அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆமாரம்பல்லம் கிராமத்தில் உள்ள வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனுவை கலெக்டர் அலுவலகம் நிராகரித்தது.

இதை எதிர்த்து, மதவழிபாட்டு தலம் அமைக்க அனுமதிக்கும்படி நூரூல் இஸ்லாம் ஷம்ஹாரிஹா சங்கம் என்ற இஸ்லாமிய அமைப்பு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடர்க்கத்தில் கட்டிடம் வணிக பயன்பாட்டிற்கு கட்டப்பட்டாலும், அதை ஆய்வு செய்தபோது கட்டிடம் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்றும் வகையில் அமைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் மாவட்ட கலெக்டர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மனுதாரரின் வணிக கட்டிடத்தை சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் சுற்றிளவில் மொத்தம் 36 இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தளம், இந்து மற்றும் கிருஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையில் வசிக்கும் பகுதியாகும். இதனால், வணிக கட்டிடத்தில் மத வழிபாட்டு தலம் அமைக்க அனுமதிப்பது மத ரீதியிலான மோதலுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்றுவதற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டார். மேலும், மாநிலத்தில் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்பட்டு வரும் மத வழிபாட்டு தலங்கள், மத வழிபாட்டு கூடங்கள் அனைத்தையும் மூட மாநில அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story