இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்குப்பதிவு


இமாசல பிரதேச சட்டமன்ற தேர்தல்: நாளை வாக்குப்பதிவு
x

இமாசல பிரதேச சட்ட சபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஷிம்லா,

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது. அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது. இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.


Next Story