இமாச்சல பிரதேசம்: தபால் பெட்டி வடிவத்தில் உலகின் மிக உயரமான தபால் நிலையம்...!


இமாச்சல பிரதேசம்: தபால் பெட்டி வடிவத்தில் உலகின் மிக உயரமான தபால் நிலையம்...!
x

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தபால் பெட்டி வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிம்லா,

உலகின் மிக உயரமான தபால் நிலைய அலுவலகம் தபால் பெட்டி வடிவில் கட்டப்பட்டு உள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஹிக்கிம், உலகிலேயே மிக உயரமான கிராமம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 14,400 அடி உயரத்தில் உள்ளது. எனவே இந்த கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த கிராமத்தில் அமைந்துள்ள தபால் நிலையம் உலகின் மிக உயரமான தபால் நிலையம் ஆகும். இந்த தபால் நிலையம் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இங்குள்ள தபால் நிலையத்தை தபால் பெட்டி வடிவத்தில் கட்டி உள்ளனா். இந்த தபால் நிலையத்தை இமாச்சல பிரதேச தலைமை தபால் மாஸ்டா் வந்திதா கவுல் திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக வந்திதா கவுல் கூறும் போது, இங்கு உள்ள தபால் நிலையம் போல நாட்டில் வேறு எங்கும் இல்லை. அதுவே ஈா்ப்பு மையம். உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இங்கிருந்து தங்களது அன்பானவா்களுக்கு கடிதங்களை அனுப்புகிறாா்கள். சுற்றுலாவின் பாா்வையில் இது மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும். என அவா் கூறினாா்.


Next Story