இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ஓவைசி கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு


இந்துக்கள் குறித்து சர்ச்சை பேச்சு; ஓவைசி கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு
x

இந்துக்கள் ஒரு திருமணம் செய்து கொண்டாலும் மூன்று பேருடன் ரகசிய வாழ்க்கை வாழ்வதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தின் சம்பல் நகரில் நேற்று நடந்த கூட்டத்தில் அசாதுதீன் ஒவைசி கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் சவுகத் அலி இந்துக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சவுகத் அலி பேசுகையில், முஸ்லீம்கள் இரண்டு திருமணம் செய்து கொள்வதாக பேசுகிறார்கள்.

ஆமாம் அது உண்மைதான்.நாங்கள் இரண்டு திருமணம் செய்தாலும் இரண்டு பேரையும் மதிக்கிறோம். ஆனால் நீங்கள் (இந்துக்கள்) ஒருவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள். ஆனால் மூன்று பேருடன் ரகசியமாக வாழ்கிறீர்கள். அவர்கள் யாருக்கும் மரியாதைகூட கொடுப்பதில்லை" என்றார்.

சவுகத் அலியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சவுகத் அலி மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ, மற்றும் 188 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story