ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ரெயிலில் அடிபட்டு  வாலிபர் பலி
x

ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

தட்சிண கன்னடா: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே தொக்கொட்டு பகுதியில் மங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கேரளாவில் இருந்து வந்த ரெயில், வாலிபர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்களூரு சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மங்களூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார், இறந்துபோனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story