மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் உள்துறை செயலாளராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவர் ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், அஜய் குமாரின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் 2023, ஆகஸ்ட் 23 வரை அஜய்குமார் பல்லா பணியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story