பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி: ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்-மந்திரி உத்தரவு


பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி: ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முதல்-மந்திரி உத்தரவு
x
தினத்தந்தி 20 Sept 2022 11:17 AM IST (Updated: 20 Sept 2022 11:24 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலியாகினர். உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்தார் முதல்-மந்திரி நிதிஷ்குமார்.

பாட்னா,

பீகாரின் மூன்று மாவட்டங்களில் 11 பேரும், பூர்னியா மற்றும் அராரியாவில் தலா 4 பேரும், சுபாலில் 3 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

"மோசமான வானிலையில் கவனமாக இருங்கள். இடியுடன் கூடிய மழையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பேரிடர் மேலாண்மைத் துறையின் பரிந்துரைகளைப் பின்பற்றவும்" என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் டுவீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


Next Story