கேரளாவில் கொடூரம்; காரில் சாய்ந்த 6-வயது சிறுவனை எட்டி உதைத்த இளைஞர்!


கேரளாவில் கொடூரம்; காரில்  சாய்ந்த 6-வயது சிறுவனை எட்டி உதைத்த  இளைஞர்!
x
தினத்தந்தி 4 Nov 2022 2:39 PM IST (Updated: 4 Nov 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தனது காரில் சாய்ந்ததாக 6-வயது சிறுவனை நெஞ்சில் எட்டி உதைத்த பதைபதைக்க சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தனது காரில் சாய்ந்ததாக 6-வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த பதைபதைக்க சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைது செய்தனர். விசாரணையில்

கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இளைஞரின் தாக்குதலில் காயம் அடைந்த சிறுவன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான்.


Next Story