மனைவியை கொலை செய்ய விஷ பாம்பை ஏவிய கணவன்; ஓரே இரவில் 2 முறை கடித்தது ஆனால்...!


மனைவியை கொலை செய்ய விஷ பாம்பை ஏவிய கணவன்; ஓரே இரவில் 2 முறை கடித்தது ஆனால்...!
x
தினத்தந்தி 13 Dec 2022 12:02 PM IST (Updated: 13 Dec 2022 12:03 PM IST)
t-max-icont-min-icon

மிகவும் விஷமுள்ள பாம்பை வைத்து மனைவியை 2 வது கொலை செய்ய கணவர் சதி திட்டம் தீட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

மந்த்சூர்

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரில் கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணமடைந்த நபரை 24 மணி நேரத்தில் இரண்டு முறை இந்த பாம்பு கடித்து உள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம். இவரது முதல் மனைவி சானு பி சில ஆண்டுகளுக்கு முன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து அவர் அஜ்மேரி ஹலிமாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் பிரிந்து சென்ற முதல் மனைவி சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டார்.இப்போது மோஜிமுக்கு இரண்டாவது மனைவியை பாரமாகிவிட்டார்.இதனால் 2 வது மனைவியை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார்.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நண்பர் ஒருவருடன் பேசி விஷப்பாம்புடன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பாம்பு பிடிப்பவர் மிக கொடுமையான விஷம் கொண்ட பாம்பான ரஸ்ஸல் வைப்பருடன் மோஜிமின் வீட்டிற்கு சென்று உள்ளார்.

ஜன்னல் வழியாக பாம்பை விட்டிற்குள் விட்டு உள்ளார். வீட்டில் 2வது மனைவி ஹலிமா மட்டும் இருந்துள்ளார்.அதே இரவில் ஹலிமாவை பாம்பு கடித்துள்ளது.காலையில் ஹலிமா இறந்துவிடுவார் என்று மோஜிம் எதிர்பார்த்தார்.

ஆனால் அது நடக்கவில்லை. காலையில் ஹலிமா எழுந்ததும், மோஜிம் மற்றும் அவரது நண்பர்கள் மீண்டும் அவரை பிடித்து, அவருக்கு விஷ ஊசியையும் போட்டு உள்ளனர்.

ஹலிமா சத்தம் போட்டு உள்ளார் உடனடியாக அக்கம்பக்கத்தினரை விரைந்து வந்து ஹலிமாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவர், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்ததால், அவரது உயிர் பிழைத்து விட்டார். இந்த வழக்கில் கணவர், பாம்பு பிடிப்பவர் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.

ஆச்சரியம் என்னவென்றால் இரண்டு முறை இவ்வளவு கொடூர விஷப்பாம்பு கடித்தும் ஹலிமாவின் உயிர் பிழைத்தது எப்படி ? அப்படியானால் சில சமயங்களில் இதுபோன்ற பாம்புகள் பொய் கடியும் கடிக்கின்றன, அந்த கடியின் போது விஷம் அதன் உடலை விட்டு வெளியேறாது என்பதுதான்.

ரஸ்ஸல் வைப்பர் பாம்பு கடித்தால் தண்ணீர் கூட கேட்க முடியாது என்று கூறப்படுகிறது. இந்த பாம்பு கடித்த சில மணி நேரங்களிலேயே அந்த இடம் பகுதி அழுகத் தொடங்குகிறது. நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகத் தொடங்குகின்றன, சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், ஒரு நபர் சில மணிநேரங்களில் இறந்துவிடுவார்.


Next Story