என்னுடைய சாதனையை புத்தகமாக வெளியிட இருக்கிறேன்


என்னுடைய சாதனையை புத்தகமாக வெளியிட இருக்கிறேன்
x

4 ஆண்டுகள் நான் ஆற்றிய பணிகளை சாதனை புத்தகமாக வெளியிட இருக்கிறேன் என்று மந்திரி சோமண்ணா கூறியுள்ளார்.

கொள்ளேகால்:-

4 ஆண்டுகால அரசியல்

சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி அமைந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலக்கட்டங்களில் நான் சிறப்பாக பணியாற்றியுள்ளேன். அரசியல் ஒரு முள் படுக்கை. இது அனைவருக்கும் சமம். என் வார்த்தை யாரையும் புண் படுத்தியிருந்தால், என்னை மன்னித்து கொள்ளுங்கள். சாம்ராஜ்நகரில் நான் பொறுப்பு மந்திரியாக பணியாற்றியதில், இருந்து இன்றுவரை சிறப்பாக பணியாற்றியுள்ளேன்.

சாலைகள், கால்வாய்கள், குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை சிறப்பாக செய்து கொடுத்துள்ளேன். வீட்டு வசதித்துறையில் நான் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள், எனக்கு திருப்தி அளித்துள்ளது. நான் பொறுப்பு வகித்த பின்னர் புதிதாக 1 லட்சத்து 14 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு உதவியுடன் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியுள்ளேன்.

புத்தமாக வெளியிடுகிறேன்

இதேபோல பல புதிய திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். இந்த 4 ஆண்டு காலத்தில் நான் ஆற்றிய பணி எனக்கு திருப்தியளித்துள்ளது. என்னுடைய சாதனையை நான் வாய்விட்டு கூற விரும்பவில்லை. அதை புத்தகமாக வெளியிட இருக்கிறேன். நான் பார்த்தில் சிறந்த தலைவர் எடியூரப்பா.

சில கருத்து மோதல் இருந்தபோது, அவர் அதை கண்டு கொள்ளவில்ைல. தற்போது அவருடன் நான் இணக்கமாகத்தான் இருக்கிறேன். அது ஒரு காலகட்டம். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த வெறுப்புணர்ச்சியும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story